Monday, January 11, 2021

விநாயக கவசம்

       விநாயக கவசம்


 


வளர்சிகையை பராபரமாய் வயங்கு 
 விநாயகர் காக்க;
           வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்திரதேக
 மதோத்கடற் தாம் அமர்ந்து காக்க ; 
           விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க;
புருவம் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க ;
            தடா விழிகள் பால சந்திரனார் காக்க ;


கவின் வளரும் அதரம் கஜமுகர் காக்க ;
              தாலங் கணக்க்ரீடர் காக்க ;
நவில் சிபுகம் கிரிசைசுதர் காக்க ;
            நனிவாக்கை வினாயகர்தாம் காக்க ;
அவிர்நகை துன்முகர் காக்க ;
           அள் எழிற் செஞ்செவி பாசபாணி காக்க;
தவிர்தலுரா இளங்கொடி போல்
           வளர்மணி நாசியைச் சிந்திதார்த்தர் காக்க ;


காமுறு பூமுகன் தன்னைக் குணேசர் நனி காக்க ;
             களம் கணேசர் காக்க ;
வாமமுறும் இருதோளும் வயங்குகிந்த
            பூர்வசர்தாம் மகிழ்ந்து காக்க ;
ஏமமுறு மணிமுலை விக்னவினாசர் காக்க ;
           இதயன் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க ;
அகட்டினைத் துலங்கு ஏரம்பர் காக்க ;


பக்கம் இரண்டையும் தராதரர் காக்க ;
           பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினதரன் காக்க ;
விளங்கிலிங்கம் வியாழ பூடணர் தான் காக்க ;
          தக்க குய்யன் தன்னை வக்ரதுண்டர் காக்க ;
சகனத்தை அல்லல் உக்ககனபன் காக்க ;

         ஊருவை மங்கள மூர்த்தி உவந்து காக்க ;


தாழ் முழந்தாள் மகாபுத்தி காக்க ;
            இருபதம் ஏகதந்தர் காக்க ;
வாழ்கரம் கிப்பிரப் ப்ரசாதனர் காக்க ;
            முன்கையை வணங்குவார் நோய்
ஆழ்தரச் செய் ஆசாபூரகர் காக்க ;
            விரல் பதும அத்தர் காக்க ;
கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க ;
           கிழக்கினில் புத்தீசர் காக்க ;



அக்கினியில் சித்தீசர் காக்க ;
          உமாபுத்திரர் தென்திசையில் காக்க ;
மிக்க நிருதியில் கணேசர் காக்க ;
            விக்கினவர்த்தனர் மேற்கென்னும் திக்கில் காக்க ;
வாயுவிற் கஜகர்ணர் காக்க ;
           திகழ்வுதீசி தக்க நிதிபன் காக்க ;
வடகிழக்கில் ஈசனந்தனரே காக்க ;


ஏகதந்தர் பகல் முழுதுங் காக்க ;
          இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்
ஒகையின் விக்கினகிருது காக்க ;
         இராக்கதர் பூதம் உருவேதாளம் மோகினிபேய்
இவையாதி உயிர்திறத்தால் வருந்துயரும் ,
           முடிவில்லாத வேகமுறு பிணிபலவும் விலக்கும்
பாசாங்குசர்தாம் விரைந்து காக்க ;



மதி, ஞானம், தவம், தானம், மானம், ஒழி, 
          புகழ்,குலம், சரீரம், முற்றும் பதிவான தனம் ,
தானியம், கிருகம், மனைவி , மைந்தர் பயில்
          நட்பாதிக் கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க ;

காமர் பவுத்திரர் முன்னான விதியாரும்
        சுற்றமெலாம் மயூரேசர் என்ஞான்றும் விரும்பிக் காக்க ;


வென்றி சீவிதம் கபிலர் காக்க ;
          கரியாதிஎல்லாம் விகடர் காக்க ;
என்று இவ்வாறு உன்னை முக்காலமும் ஓதிடின் ;
         நிம்பால் இடையூரொன்றும் ஒன்றுறா ;
முனிவர்கள் அறிமின்கள் ; யாரொருவர் ஓதினாலும்
          மற்ற ஆங்கவர் தேகம் பிணியற்று சிரதேகமாகி மின்னும் !!